பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து உதகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை : பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி : பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளும், இயற்கை சூழல் நிறைந்த மாவட்டமாகவும் திகழ்ந்து வருகிறது. தற்போது அங்கு கோடை சீசன் நிலவி வருவதால், அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. 

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்பளர்கள், தட்டுகள், பைகள் போன்றவற்றை வனப்பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் வீசி விட்டு செல்வதால் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதோடு, அதை உட்கொள்ளும் வனவிலங்குகளின் உயிர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கி வருவதை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதித்தும், மாவட்ட எல்லைகளில் இதற்க்காக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.



ஆனாலும் சுற்றுலா பயணிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று உதகை படகு இல்லத்திற்க்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது. 

இதில் பள்ளி மாணவிகள் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியதோடு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...