'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பாணியில் கொள்ளையடித்த 8 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பாணியில், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த 8 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பாணியில், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த 8 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

திருப்பூரை அடுத்த பூலுவபட்டி பழனிசாமி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவரது, மனைவி சாந்தமணி (40). இவர்களுக்கு ஸ்ரீராம் (13), பவதாரணி (10) என்ற மகனும், மகளும் உள்ளனர். தனியார் பனியன் நிறுவனம் நடத்தி வரும் சிவக்குமார், கார் மற்றும் இடம் வாங்கி, விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் வழக்கம் போல சிவக்குமார் பனியன் நிறுவனத்துக்கு சென்று விட்டார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மனைவியிடம், காரில் சென்ற சிலர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி அறிமுகமாகியுள்ளனர்.

வீட்டை சோதனையிட்ட அவர்கள், 30 சவரன் நகை, ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். மேலும், சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்கை கைப்பற்றிச் சென்றனர். இதையறிந்து, வீடு திரும்பிய சிவக்குமார், வீட்டில் சோதனை நடத்தியது போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என்பதை கண்டுபிடித்து போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு, திருப்பூர் மாநகர போலீஸ் துணை ஆணையர் பிரபாகரன், போலீஸ் உதவி ஆணையர் அண்ணாதுரை, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு ஆகியோர் விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த கைரேகைகளை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர், தனிப்படை அமைத்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜெயராம் (வயது 42), கார்த்தி (வயது 38), துளசி சத்குரு (வயது 39), கார்த்தி என்கிற போலீஸ் கார்த்தி (வயது 37), வேணுகோபால் (வயது 48), ரகு (வயது 29), ஆறுமுகம் (வயது 38), முத்துகுமார் (வயது 25) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 18 சவரன் தங்க நகைகள், பணம் ரூ. 1,45,000, CCTV DVR, மேலும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் (TN 38 BE 5676) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சிவக்குமார் சூதாட்ட கிளப்புகளில் சென்று சூதாடும் பழக்கம் கொண்டவர். இவர், செல்லும் சூதாட்ட கிளப்புகளுக்கு குற்றவாளி ஜெயராம் என்பவரும் வந்து செல்வார். அங்கு, சூதாட்டத்தின் போது, சிவக்குமார் அதிக அளவில் பணம் வைத்து விளையாடுவதும், அதன் மூலமாக அதிக பணம் சம்பாதிப்பதையும் ஜெயராம் கவனித்து வந்துள்ளார். எனவே, சிவக்குமாரிடம் அதிக அளவில் பணம் இருக்கும் என தெரிந்துகொண்டு, அதனை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஜெயராமும், அவருடன் சேர்ந்து சூதாட்ட கிளப்பில் சூதாடும் நண்பர்களான கார்த்திக், சத்குரு, வேணுகோபால் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, போலீஸ் கார்த்தி, ரகு, முத்துக்குமார், ஆறுமுகம் ஆகியோர் ஒன்று சேர்ந்து சிவக்குமாரின் வீட்டை நோட்டமிட்டு, அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இக்கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...