பள்ளி சிறார்களுக்கான கட்டணமில்லா கோடைக்கால கலைப்பயிற்சி முகாம்

கோவை: கோவை மண்டல அலுவலகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு கட்டணமில்லா கோடைக்கால கலைப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

கோவை: கோவை மண்டல அலுவலகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு கட்டணமில்லா கோடைக்கால கலைப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- சிறார்களின் கலை ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இளம் வயதில் கலை ஆர்வம் மிக்கவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக சிறுவர், சிறுமியருக்கு பகுதி நேர கலைப்பயிற்சியினை அளித்து வருகிறது. கோவை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி செல்லும் சிறார்கள், இக்கோடைக்கால விடுமுறையில் பயனுள்ள வகையில் கலைகள் பயின்றிட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடைக்கால கலைப்பயிற்சி முகாம், வரும் மே 09 முதல் மே 18-ம் தேதி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட உள்ளது.

குரலிசை (வாய்பாட்டு), பரதநாட்டியம், ஓவியம், குங்ஃபூ (தற்காப்புக் கலை) ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் இம்முகாமில் சேர்ந்து பயன்பெறலாம். இப்பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. சிறவர் மன்ற சந்தாவாக ரூ. 100 மட்டும் செலுத்தப்பட வேண்டும். பயிற்சி நிறைவு நாளன்று மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர்வதற்கான முன்பதிவு மே 3-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புவோர், கோவை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9751528188 என்ற எண்ணிலோ அல்லது மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தை 0422 2610290 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளைப் பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை கோவை மாவட்டத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...