சாலை அமைக்க விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையை இணைக்கும் வகையில் அமைக்கவிருக்கும் ரிங் ரோட்டிற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையை இணைக்கும் வகையில் அமைக்கவிருக்கும் ரிங் ரோட்டிற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று கோவை அன்னூர் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 8 கி.மீ., நீளம், 150 அடியில் அகல வட்ட சாலை அமைக்க கரியாம்பாளையத்தில் இருந்து தாசம்பளையம் வரை அவிநாசி-அன்னூர் சாலையை இணைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் அளவீடு செய்து நெடுஞ்சாலை துறையினர், கல் பதித்து வருகின்றனர். முன்னதாக அறிவிக்கப்பட்ட வட்டசாலை திட்டத்தை மாற்றி, தற்போது முன் அறிவிப்பின்றி தங்களது விவசாய நிலங்களில் கல் பதித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தானியம், கரும்பு, தென்னை, மஞ்சள், வாழைகள் பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வட்ட சாலை விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதால், 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். வட்டசாலை அமைந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நண்மை அடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முறையான அளவீடு செய்து விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், இவ்வாறு கூறினர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கும் மனு அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...