மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க சார்பில் பேரணி

கோவை: கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை: கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 4 சதவீத அரசு வேலைவாய்ப்பு, இலவச வீடு, கல்வி, உதவித் தொகையை ரு.5000-மாக உயர்த்தி வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அஷோக் ஸ்ரீநிதி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக சென்றனர்.

கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...