எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும், நிறுவனங்களில் பணி புரிவது குறித்தும் மிகவும் தரக்குறைவான கருத்தை பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். எஸ்.வி. சேகரின் இந்தப் பேஸ்புக் பதிவுக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து மேற்கூறிய சர்ச்சைக்குரிய பதிவை எஸ்.வி. சேகர் நீக்கிவிட்டார். எனினும் எஸ்.வி சேகரின் செயலுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி எஸ்.வி சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்க விசாரித்த சென்னை ஐகோர்ட், எஸ்.வி சேகரை காவல்துறை கைது செய்ய தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. கோடைக்கால முதல் அமர்வில் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...