பள்ளித் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

கோவை : பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது எனவும், குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


கோவை : பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது எனவும், குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் பொறியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் துவங்க இருக்கும் ஆன்-லைன் கவுன்சிலிங் குறித்த அறிமுக விளக்க நிகழ்ச்சி தனியார் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயாகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிகளவு நிதி வழங்கி இருக்கிறது. அதன்மூலம் நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. மேலும், மே மாதத்தின் இறுதி வாரத்தில் 1,6,9 மற்றும் 11 வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும். சி.பி.எஸ்.சி., பாடத்தை விட சிறப்பாக கல்வி திட்டம் கொண்டு வரப்படும். பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஒருநாள் கூட கால தாமதம் ஏற்படாது. குறிப்பிட்ட தேதியில் இரண்டே மணித்துளிகளில் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். 

மேலும், கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்தக்கூடாது. வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு முதலில் அறிவுரை வழங்கப்படும். மீறி வகுப்பு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார். 



இதனைத்தொடர்ந்து, பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், "11 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கிலும் நியாய தராசு வரும். பொருத்து இருந்து பார்க்கலாம். திவாகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர்தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க., இயக்கம் ஆலமரம் போன்றது. டிடிவி தினகரன் கட்சியில் அனைவரையும், கட்சியில் இருந்து அவரே வெளியே அனுப்பி விடுவார்," என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...