கோவை ரயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை நிறுத்த தனிவசதி

கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மத்திய ரயில்நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மாற்றுத் திறனாளிகள் தனியாக வாகனங்கள் நிறுத்த வசதிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



தற்போதுள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஒருபுறம், அதாவது ரயில்நிலைய முன்புற வாசல் அருகே மட்டும் இடவசதி தரப்பட்டிருந்தது. தற்போது, நிறுத்துமிடத்தின் இருபுறங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் வரும் மாற்றுத்திறனாளிகள் அவற்றில் இருந்து இறங்கி எளிதாக ரயில்நிலையத்தின் உள் செல்ல வசதியாக, ரயில்நிலைய முன்புற வாசல் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்தவும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால், பணிகள் நிறைவுற்றவுடன், அதற்கான குறியீட்டுப்பலகைகள் அந்தந்த இடங்களில் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...