அத்துமீறிய தனியார் பேருந்து ஊழியர்கள் : உடனடி நடவடிக்கை எடுத்த கோவை மாநகர போலீஸ்

கோவை : கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிப்பது தொடர்பான புகார் கிடைத்ததும் அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு அபராதம் விதித்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கோவை : கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிப்பது தொடர்பான புகார் கிடைத்ததும் அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு அபராதம் விதித்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 



போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது மாநகர போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 1 A (TN 42 M 5112) என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்றில், ஓட்டுநர் இருக்கையின் அருகில் உள்ள ஜன்னலில் அமர்ந்து அந்த பேருந்தின் ஊழியர் ஒருவர் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 'கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையில், பயணம் செய்யும் அந்த ஊழியரால், இருந்தில் பயணிக்கும் மற்றவர்களின் பாதுகாப்புக்கும் கேள்விக்குறி ஏற்பட்டது. 

இது தொடர்பாக, இன்று சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில், போக்குவரத்து காவலர்கள் அந்த தனியார் பேருந்தின் ஓட்டுநருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். 

புகார் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...