பிறந்த 2 நிமிடத்திற்குள் ஆதார் எண் பெற்ற குழந்தை: குறுகிய காலத்தில் ஆதார் எண் பெற்று சாதனை

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 1.48 நிமிடத்திலேயே அதிகாரிகள் ஆதார் எண் வழங்கியுள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 1.48 நிமிடத்திலேயே அதிகாரிகள் ஆதார் எண் வழங்கியுள்ளனர்.

மகாராஷ்ட்ராவின் புல்தானா பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 1.48 நிமிடத்திலேயே அதிகாரிகள் ஆதார் எண் வழங்கியுள்ளனர். சாச்சி என பெயரிடப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோர் இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே செய்திருக்கின்றனர். மகாராஷ்ட்ராவின் புல்தானா பகுதியை சேர்ந்த பெற்றோர் குழுந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் அவர்களின் ஆதார் அட்டை மூலம் பால் ஆதார் பெற்றிருக்கின்றனர்.

வழக்கமான ஆதார் எண் பெற நமது பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும் நிலையில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தகவல்கள் இல்லாமல் ஆதார் வழங்கப்படுகிறது. இந்த சேவை பால் ஆதார் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் மட்டும் பயன்படுத்தி குழந்தை பிறந்த 1.48 நிமிடங்களில் பால் ஆதார் பெறப்பட்டிருக்கிறது. இதன்மூலம், குறுகிய காலத்தில் ஆதார் எண் பெற்ற குழந்தை என்ற சாதனையை சாச்சி பெற்றுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...