சூறைக் காற்றால் சரிந்த மரம் : தகவல் கிடைத்த 90 நிமிடங்களில் அப்புறப்படுத்திய குழு

கோவை : கோவையில் வீசிய சூறாவளி காற்றால் சாய்ந்த மரத்தினை 90 நிமிடங்களில் அகற்றிய மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோவை : கோவையில் வீசிய சூறாவளி காற்றால் சாய்ந்த மரத்தினை 90 நிமிடங்களில் அகற்றிய மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை 06 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது, புயல் போல வீசிய சூறைக் காற்றினால், கட்டிடங்களின் மேற்கூறைகள் பறந்து சென்றன. மேலும், சாலைகளில் கிடக்கும் மணல் துகள்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இதனிடையே, வெங்கடசாமி சாலை, புது சித்தாபுதூர் பகுதியில் இருந்த பெரிய வேப்பம் மரம் ஒன்று இந்தக் காற்றுக்கு சரிந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பெரும் சேதமடைந்தன. மேலும், மின்சார வயர்களின் மீது விழுந்ததால், தீப்பொறி கிளம்பியதுடன், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.



இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மீட்பு குழு, மின்சார ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், சுமார், 90 நிமிடங்களில் உள்ளூர் மக்களின் உதவியுடன் சாலையில் கிடந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், மின்சாரமும் சீர்செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.

தகவல் அறிந்த சில மணி நேரங்களிலேயே, எந்தவித உயிர்சேதமும் இல்லாமல் பணிகளை துரிதமாக செய்து முடித்த குழுவினருக்கு பொதுமக்கள் பாரட்டுக்களை கூறி வருகின்றனர். இதனிடையே, திறம்பட செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மலைசாமி, ரவிச்சந்திரன், பாபு, ஜீவா மற்றும் பாலமுருகன், மாநகாரட்சி ஜே.சி.பி. ஓட்டுநர் இளவரசன் ஆகியோரை கவுரவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...