ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

நீலகிரி : நீலகிரியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி : நீலகிரியில் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 



உதகை மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மார்க்கெட் பகுதியில் உள்ள பழக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு இருந்த சில கடைகளில் மாம்பழங்கள், ஏத்தலின் கிராசரால் எனும் ரசாயனத்தைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்து சுமார் 600 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. 

இதைப் பற்றி அதிகாரிகள் கூறும்போது :- மாம்பழங்கள் மட்டும் இன்றி வாழைப்பழங்களும், இதே போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இதைப்போன்று ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பலன்களை உண்பதால் வயிற்றுப் போக்கு, தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதுமட்டுமின்றி, புற்றுநோய் அபாயமும் உள்ளது. 

எனவே, பொதுமக்களுக்கு இதுபோன்ற விவகாரங்கள் தெரிய வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். 

பல்வேறு நாடுகளில் இருந்தும் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலா நகரமான உதகையில் வந்து கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...