பாலியல் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2013-ம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு வழங்கினார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இன்று மாலைக்குள் முழு தண்டனை விபரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசாராமிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கும் அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால், ஆசாராமிற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆசாராம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசத், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசாராமின் ஆசிரமங்களுக்கும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ஜோத்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசாராமிற்கு அதிகபட்சம் தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. அதேசமயம், ஆசாராமின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என ஆசாராம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். ஆசாராம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், சமூர் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால், ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அறிந்து அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுது வருகின்றனர். முன்னதாக, இன்று வழங்கப்படும் தீர்ப்பு ஆசாராமிற்கு சாதகமாக வர வேண்டும் என ஆமதாபாத் உள்பட பல இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களில், ஆதரவாளர்கள் பலர் சிறப்பு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...