திருப்பூரில் 'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் ரூ.4 லட்சம் கொள்ளை

திருப்பூர்: திருப்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல நடித்து 30 சவரன் நகை மற்றும் ரூ. 4 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல நடித்து 30 சவரன் நகை மற்றும் ரூ. 4 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருப்பூரை அடுத்த பூலுவபட்டி பழனிசாமி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவரது, மனைவி சாந்தமணி (40). இவர்களுக்கு ஸ்ரீராம் (13), பவதாரணி (10) என்ற மகனும், மகளும் உள்ளனர். தனியார் பனியன் நிறுவனம் நடத்தி வரும் சிவக்குமார், கார் மற்றும் இடம் வாங்கி, விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல சிவக்குமார் பனியன் நிறுவனத்துக்கு சென்று விட்டார். இதனால், வீட்டில் அவரது மனைவி சாந்தமணி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.



இதனிடையே, இன்று மதியம் வீட்டு முன்பு காரில் வந்த ஐந்து பேர் வேகமாக, கீழே இறங்கி வீட்டுக்குள் சென்று சிவக்குமார் இருக்கிறாரா என்று கேட்டனர். பின்னர், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, வீட்டில் சோதனையிட வேண்டும் என்றும், வீட்டுக்குள் வாருங்கள் என்று சாந்தமணியை அழைத்தார். சிலர் அறைக்குள் சென்று பீரோவில் நகை, பணம் ஆகியவற்றை எடுத்து வந்து டேபிள் மீது வைத்தனர். மற்றொருவர் வீட்டுக்குள் இருக்கும் மூன்று சி.சி.டி.வி., கேமராவின் பேக்கேஜ் எங்க இருக்கிறது என்று கேட்டார். பின்னர், மாடிக்கு விரைந்து சென்ற அந்த நபர் மாடியில் இருந்த அறையில், சி.சி.டி.வி., கேமராவின் ஹார்டு டிஸ்கை கைப்பற்றினர். 

அரைமணி நேரம் வரை விசாரித்து விட்டு, நகை, பணத்தை எடுத்து செல்கிறோம். கோவையில் உள்ள அலுவலகத்துக்கு வந்து, கையெழுத்து போட்டு நகை, பணத்தைப் பெற்று செல்லுங்கள் என்று கூறிவிட்டு, வேகமாக வீட்டை விட்டு அவர்கள் வெளியேறினர். இதையடுத்து, கணவருக்கு தகவல் அளித்தார். வீட்டுக்கு சிவக்குமார் விரைந்து வந்து விசாரித்தார். அதில், வீட்டுக்கு வந்து சென்ற நபர்கள், போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாநகர போலீஸ் துணை ஆணையர் பிரபாகரன், போலீஸ் உதவி ஆணையர் அண்ணாதுரை, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு ஆகியோர் விரைந்து சென்று விசாரித்தனர். அதில், 30 சவரன் தங்க நகை, ரூ. 4 லட்சம் ரொக்கம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த கைரேகைகளை போலீசார் கைப்பற்றினர். சினிமா பட பாணியில் அதிகாரிகள் என்று கூறி பட்டப்பகலில் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...