கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்பு

கோவை: கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட காலநிலையே காணப்படும் என்றும், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட காலநிலையே காணப்படும் என்றும், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த 4 நாட்களைப் பொறுத்தவரையில் வானம் வறண்ட நிலையில் காணப்படும். காலை நேரங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அதேசமயம் இரவு நேரங்களில் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகஙககூடும். 38 டிகிரி செல்சியஸ் என்ற போது 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகக்கூடும். இதுவரை கோவையில் அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் தான் பதிவாகியுள்ளது. திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் வறண்ட வானமே காணப்படும். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஏற்கனவே 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகிவிட்டது. கோவையில் வெயிலின் தாக்கத்தால் சில இடங்களில் தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம் கோவையை பொறுத்தவரையில் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. வெப்பம் காரணமாக சில சமயம் காற்று சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் வாழை மரத்திற்கு முட்டுக் கொடுத்து நிறுத்தி கொள்வது நல்லது. வானம் தெளிவாகக் காணப்படுவதால் வெயிலின் தாக்கம், ரேடியேஷன் நேரடியாக மக்கள் மீது படும்," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...