வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு: மாப்பிள்ளை கோலத்தில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: திருப்பூரில் வீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் யாரும் பெண் தர முன்வராததால், வழித்தடம் ஏற்படுத்தி தரக்கோரி திருமணக் கோலத்தில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு அளித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் யாரும் பெண் தர முன்வராததால், வழித்தடம் ஏற்படுத்தி தரக்கோரி திருமணக் கோலத்தில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு அளித்தார்.

ஊத்துக்குளி அடுத்த சேனாபதி செட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருணாசலம். இவருக்கு சொந்தமான வீட்டிற்கு அரசால் வழங்கப்பட்ட பட்டா உள்ள நிலையில், அவரது வீட்டிற்கு வழித்தடமானது குறிப்பிடப்படவில்லை. இதனால், இவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் அவர்கள் வீட்டிற்கு வழி இல்லாதவருக்கு எப்படி பெண் தருவது என பெண் தர மறுப்பதாக அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். எனவே, தங்கள் வீட்டிற்கு சென்று வர முறையான பாதையை அமைக்க உத்தரவிடக் கோரி அருணாசலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள அவரது இடத்திற்கு முறையான பாதையை ஓதுக்கீடு செய்து தர வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், இதுவரையிலும் அதிகாரிகள் தங்களுக்கு வழித்தடம் ஏற்படுத்தி தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இருப்பினும், அவரது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், தனக்கு திருமணம் நடக்க வழித்தடம் பிரச்சனையாக இருப்பதை உணர்த்தும் விதமாகவும், பாதிக்கப்பட்ட அருணாசலம் மணமகன் கோலத்தில் கழுத்தில் மாலையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.



இதனைக் கண்ட போலீசார் மணமகன் கோலத்தில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுத்தனர். பின்னர், நீண்ட நேரத்திற்குப் பிறகு மாலையைக் கழற்றிய பிறகே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். திருமணம் நடக்க அரசு அலுவலர்களே தடையாக இருப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் மணமகன் கோலத்தில் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...