காவிரி விவகாரம்: மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டம் அறிவிப்பு

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. 

திருப்பூர் குமரன் சிலை முன்பு தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், நியுட்ரினோ திட்டத்தை கைவிடக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொது செயலாளர் சங்கிலி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், "நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட விட்டால் இளைஞர்கள் ஒன்று திரண்டு வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு அந்தத் திட்டத்தை தகர்ப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்த உள்ளோம்." எனக் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட பொது செயலாளர் பாண்டியராஜன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வம், திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...