மே 3 முதல் 30-ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மே 3-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மே 3-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பழகன் இன்று அறிவித்தார். அவர் கூறியதாவது:- பொறியியல் கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதே போல, விண்ணப்பப் பதிவும் ஆன்லைனிலேயே நடைபெறும். ஆன்லைன் மூலமாக மே 3 முதல் 30-ம் தேதி வரை மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.

கிராமத்தில் இருக்கும் மாணவர்கள், ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வசதியாக தமிழகத்தில் 42 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 42 கல்லூரிகளில் அமைக்கப்படும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மையங்களில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை சரியாக பதிவு செய்ய உதவி செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் போது அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும்.

இந்த மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால், விண்ணப்பக் கட்டணம் உண்டு. இந்த மையங்களுக்கு வந்துதான் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வசதி இருப்பின் அவரவர் இடங்களிலேயே விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், சான்றிதழை சரிபார்க்க ஜூன் முதல் வாரத்தில் இந்த மையங்களுக்குத்தான் அனைத்து மாணவர்களும் செல்ல வேண்டும்.

வரும் மே 15-ம் தேதி பொறியியல் கலந்தாய்வில் எத்தனை கல்லூரிகள் பங்கேற்கின்றன என்ற சரியான தகவலும், எத்தனை மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளது என்ற தகவலும் வெளியிடப்படும். அதன் பிறகு, ஜூலை முதல் வாரத்தில் கல்லூரியை தேர்வு செய்து பதிவு செய்தால் போதும். கல்லூரியை தேர்வு செய்து பதிவு செய்த பிறகு கூட தங்களது தெரிவுகளை மாற்றிக் கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது எவ்வாறு ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்பது குறித்த குறும்படம் காட்டப்படும். அதைப் பார்த்தும் மாணவர்கள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் சரிபாக்க 6 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அந்த 6 நாட்களில் சான்றிதழை சரி பார்க்க முடியவில்லை என்றாலும், 7-வது நாளாக அவகாசம் அளிக்கப்படும். ஆனால், அந்த 7-வது நாளில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் சென்னையில் தான் வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியும். அதே சமயம், சம்பந்தப்பட்ட மாணவர் வரமுடியாத நிலையில் இருந்தால், அவர் வரவில்லை என்றாலும், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் சான்றிதழைக் கொண்டு வரவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும் மாணவர்களுக்கு கூடுதல் வசதியாக, ஆன்லைன் விண்ணப்பத்தில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்ய அளவற்ற வாய்ப்புகள் வழங்கப்படும். அதாவது கல்லூரியை தேர்வு செய்யும் இடத்தில் ஒரே ஒரு கல்லூரியை மட்டும் அல்லாமல், ஒரு மாணவர் உதாரணமாக 25 கல்லூரியைக் கூட தேர்வு செய்யலாம். இதில் எந்த உச்ச வரம்பும் இல்லை. இதே =போல, கல்லூரி, பாடப்பிரிவு, விருப்ப வரிசை என எத்தனை இடங்களையும் அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...