கார்களில் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு : சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல்

டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி : அடுத்த ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்த முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்களில் பொருத்தப்பட்டு இருக்கும் பதிவு எண் பலகைகளை, உயர் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள், 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து, அடுத்தாண்டு, ஜனவரியிலிருந்து விற்பனைக்கு வரும் கார்களில், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் பொருத்தப்பட உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை, கார் பதிவு எண் பலகைகளை, அந்தந்த மாநில அரசுகளே வாங்கி, வாகனப் பதிவின்போது பொருத்தி வந்தன. இனி, இந்த உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் கார் தயாரிப்பு நிறுவனங்களாலேயே பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த புதிய பதிவு எண் பலகையின் விலை, கார் விலையுடன் சேர்க்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

காரின் இன்ஜின் எண், 'சேசிஸ்' எண் போன்ற விபரங்களும் அதில் இருக்கும். கார் திருட்டு போன்ற சம்பவங்களின் போது, இவை பெரும் உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின், இந்த பதிவு எண் பலகை மாற்றம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. 

இது தொடர்பாக வரும் மே 10-ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...