ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை - ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு

கோவை : ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை : ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையை அடிப்படையாகக் கொண்ட புதிய காவல் உதவி மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட இக்காவல் உதவி மையத்தை கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மொழி பிரச்சினை காரணமாக ஏற்படும் இடையூறுகளை களையும் விதமாகவும், உரிய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டும் விதமாகவும் இந்த காவல் உதவி மையம் செயல்படும். இந்தி, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிப்புலமை உள்ளவர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இதற்கென தனியாக நியமிக்கப்பட்டு வெளி மாநில மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவி புரிவார்கள். 

தற்போது, மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள காவல் உதவி மையம் போல், விரைவில் பிற ரயில் நிலையங்களிலும் தொடங்கப்படும். ரயில்வேயில் தற்போது மூன்றில் ஒரு பங்கு பெண் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். ரயில் பயணங்களின் போது பெண் பயணிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பயணத்தின் போது தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை வாய் மொழியாக புகார் தெரிவித்தால் கூட அதனை வழக்காகப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...