ஆப்கான் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் தேசிய அடையாள அட்டை சான்று வழங்கும் அலுவலகம் உள்ளது. அந்த மையத்திற்கு இன்று காலை வந்த பயங்கரவாதி தனது உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைப் படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராகவும், பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் பொது மக்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாதமும் பொறுப்பேற்று கொள்ளவில்லை.