கோவையில் சேற்றை முகத்தில் பூசி புவி தினம் கொண்டாடிய தன்னார்வலர்கள்

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று சேற்றை முகத்தில் பூசி புவி தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று சேற்றை முகத்தில் பூசி புவி தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இன்று புவி தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி கோவையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புவியை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு இன்று துளசி செடிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.



உக்கடம் பெரிய குளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துளசிச் செடிகளை வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து, புவி தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக, புவிக்கும் தங்களுக்கும் இருக்கும் தொடர்பினை உணர்த்தும் வகையில் தன்னார்வலர்கள் தங்களது முகங்களில் சேற்றினை பூசிக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...