சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது சர்ச்சைக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவு செய்திருந்தார். இது பெண்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை கடும் கோபமடையச் செய்தது. அவர் மீது பத்திரிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், தற்போது எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் கடந்த இரு தினங்களாக வீட்டில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.