எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

கோவை : பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. 



ஆளுநருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த பா.ஜ.க.,வின் எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்திருந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எஸ்.வி. சேகருக்கு, பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எஸ்.வி. சேகர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 



இந்நிலையில், எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்கள் காத்திருப்புப் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 



பின்னர், எஸ்.வி. சேகர் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு ஆணையரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள், உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அப்போது பேசிய ஆணையர், "பத்திரிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...