தடாகம் பகுதியில் புதிய காவல்நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை : கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். 



குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் காவல்நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தடாகம் பகுதியில் புதிய காவல்நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புணரமைக்கப்பட்ட காவல்நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த புதிய காவல்நிலையம் 34-வது காவல் நிலையமாக திறக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். மாவட்டத்தில் ஏற்கனவே, 33 காவல்நிலையங்கள் மற்றும் 3 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. 

தடாகம், சின்ன தடாகம், வீரபாண்டி, பன்னிமடை ஆகிய நான்கு கிராமங்கள் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பட்டிற்குள் வருகின்றன. இரண்டு உதவி ஆய்வாளர், இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் 9 பேர் மற்றும் காவலர்கள் 2 பேருடன் இந்த காவல்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் திறக்கப்பட வேண்டிய இந்த காவல்நிலையம், தடாகம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாலை 3.30 மணியளவில் திறக்கப்பட்டது. 

"மலைவாழ் மற்றும் கிராமமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளின் போது துடியலூர் காவல்நிலையத்தை நாடிச் செல்ல வேண்டி இருந்தது. தற்போது, இந்த காவல்நிலையம் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்" என்று போலீசார் தெரிவித்தனர். 

புதிய காவல்நிலையம் திறப்பு விழாவில், மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...