பல்லுயிர் பெருக்கத்திற்காக வனக்குட்டையில் 2,000 மீன்களை விட்ட வனத்துறை

கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட குட்டையில் பல்லுயிர் பெருக்கத்திற்காகவும், பறவைகளுக்கு உணவு அளிக்கும் விதமாகவும் 2,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட குட்டையில் பல்லுயிர் பெருக்கத்திற்காகவும், பறவைகளுக்கு உணவு அளிக்கும் விதமாகவும் 2,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. 



கோவை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் கடுமையான தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் உழியூர் என்ற இடத்தில் வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில், 1.5 ஏக்கர் பரப்பளவில் செயற்கை குட்டை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குட்டைக்கு அருகில் இருக்கும் ஆற்றில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் வரை செயற்கையாக குழாய்கள் அமைத்து, தண்ணீர் கொண்டு வரப்பட்டு குட்டையில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், மழைக் காலங்களில் இதில் தண்ணீர் நிரம்பினால் ஒரு வருடம் வரை வனவிலங்குகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. அத்துடன் தொடர்ந்து செயற்கையாகவும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால் இந்தக் குட்டைகளில் பறவைகளும் அதிக அளவில் தண்ணீர் தேடி வரத்தொடங்கியுள்ளன.



எனவே, இங்கு வரும் பறவைகளுக்கு தொடர்ந்து உணவு அளிக்கும் வகையிலும், பல்லுயிர் பெருக்கத்திற்காகவும் உழியூர் வனக்குட்டையில் சுமார் 2,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதனால், குட்டைக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முயற்சி மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...