திருப்பூரில் ஆசைவார்த்தைக்கு அடிபணிந்த செல்போன் திருடர்கள்

திருப்பூர் : திருப்பூரில் மிளகாய் பொடி தூவியும் கத்திமுனையில் செல்போன் திருடிய திருடனை, பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்கள் உதவியுடன், ஆசைவார்த்தை காட்டி பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் மிளகாய் பொடி தூவியும் கத்திமுனையில் செல்போன் திருடிய திருடனை, பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்கள் உதவியுடன், ஆசைவார்த்தை காட்டி பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் காங்கேயம் சாலை நல்லூர் பகுதியில் வசித்து வரும் கமலக்கண்ணன் ஊற்றுக்குளி சாலை இரண்டாம் இரயில்வே கேட் பகுதில் வேலை செய்துவருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு இரவு வீடு திருப்பும் போது, கமலக்கண்ணனின் இருசக்கர வாகனம் பெட்ரோல் இல்லாமல் மின்மாயனம் முன்பு நின்றுள்ளது.

அதைத் தொடர்ந்து உடன் வந்த கமலக்கண்ணனின் நண்பன் வாகனத்தை படுக்கவைத்து அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு செல்வதையும் கமலக்கண்ணன் தனியாக வருவதைக் கண்ட ஜீவகனேசன் மற்றும் விக்னேஷ் இருவரும் இருசக்கர வகந்த்தில் வந்து, கமலக்கண்ணன் மீது மிளகாய்த்தூளை தூவிவிட்டு செல்போனை பிடுங்கியுள்ளனர்.

அப்போது கமலக்கண்ணன், திருடனின் சட்டையை பிடித்த போது ஜீவகனேசன் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து கமலக்கண்ணன் தனது நண்பர்கள் உதவியுடன், நல்லூர் பகுதியில் கமலக்கண்ணனுக்கு தரவேண்டிய பணம் ரூ.15,000/- பஸ்டாப் அருகில் உள்ள பெட்டிக்கடையில் தந்துள்ளேன் என்றும் வந்து வங்கிக்கொள்ளவும் என சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளனர்.



சிறிது நேரம் கழித்து ஜீவகனேசன், அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு அருகில் சுற்றிவந்துள்ளான். மேலும், அந்த பெட்டிக்கடைக்கு சென்று பணத்தை கேட்டபோது அருகில் இருந்த கமலக்கண்ணனின் நண்பரான விஷ்ணு அவனை பிடித்துள்ளார். அதனை கண்ட மற்ற நண்பர்களும் வந்து சூழ்ந்துகொண்டு அவனைபிடித்து அருகில் உள்ள ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நண்பர்கள் குழுவாக சேர்ந்து திருடனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த  சம்பவம் திருப்பூர் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...