நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பாதை அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தில் மோதி நின்ற விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உயிர் தப்பினர்.

உதகையில் இருந்து பழனி செல்லும் பேருந்து, குன்னூர் காந்திபுரம் அருகே வளைவில் வேகமாகத் திரும்பியது. மழையின் காரணமாக பிரேக் பிடிக்காத காரணத்தால் அந்தப் பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த இரண்டு மின் கம்பங்களில் மோதி, சாலையின் விளிம்பில் நின்றது. இந்த சம்பவத்தால் பேருந்தில் பயணம் செய்த 54 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து மின் கம்பத்தில் மோதவில்லை எனில், 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இருக்கும் என உயிர்தப்பிய பயணிகள் தெரிவித்தனர்.