உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.


நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. 



உதகையில் கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில், சமவெளிப் பகுதிகள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர். இங்குள்ள சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க சுற்றுலா தலங்களைக் காண வருகின்றனர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாக நடவடிக்கையின் பேரில், நகராட்சி ஊழியர்கள் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறை பாதுகாப்போடு நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டனர். 



இது தொடர்பாக சாலையோர வியாபாரிகள் கூறும்போது:- இதுபோன்ற கோடை சீசன் காலங்களில் மட்டுமே எங்களுக்கு வியாபாரமானது இருக்கும். பிற நாட்களில் எங்களது வியாபாரம் இருக்காது, என வேதனையுடன் தெரிவித்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...