தமிழகத்தில் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை திறக்க நடவடிக்கை

அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதி நாளில் அரசியலில் பிரவேசித்த ரஜினி, முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றம் செய்து, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.  மக்கள் மன்றத்திற்கு குக்கிராமங்கள் தோறும் கிளைகள் அமைக்கவும், அந்தக் கிளைகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 65,500 குக்கிராமங்களில் மன்றத்தின் கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணி தீவிரமாக நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 65,000 கிளைகள், ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அந்தப் பட்டியலுடன் புதிய கட்சியை அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...