பேராசிரியை நிர்மலா தேவிக்கு 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவல்

பேராசிரியை நிர்மலா தேவிக்குயை 5 நாள் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவிக்குயை 5 நாள் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற சம்பவம் தமிழக வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்குப் பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.

இதனிடையே, நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன. இந்த நிலையில், நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலில் 7 நாட்கள் அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...