நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை கலந்தாய்வு கூட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுபான்மையினர் சமுதாய மக்களுடன் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுபான்மையினர் சமுதாய மக்களுடன் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் தமிழக அரசு சிறுபான்மையின மக்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளைப் பெரும்பான்மையினருக்கு நிகராக மேம்பாடு செய்திடும் நோக்கிலும், இப்பிரிவினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட கல்வி ஒரு முக்கியமாக ஊன்று கோலாகும் என்ற அவசியத்தை கருத்திற் கொண்டு சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்கு அதிக அளவில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

சிறுபான்மையின மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திட மாநில அளவில் தனியே சிறுபான்மையினர் நல இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டும், மாவட்ட அளவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 1 கண்காணிப்பாளர், 1 இளநிலை உதவியாளர் மற்றும் 1 தட்டச்சர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும், பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கென அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்காக 35 சதவீத, தனி இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன்படி 4,06,324 மாணவ, மாணவியருக்கு ரூ.61.95 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும் கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தனி நபர் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடன் உதவி திட்டம், ஆட்டோ கடன் திட்டம், சிறு கடன் திட்டம் என 5 வகை கடன் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களிடம் குறைகள், கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா, மாநில சிறுபான்மையின ஆணையக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.சையது காமில் சாஹீப் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் சிறுபான்மையினர்  மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...