கோவையில் ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக வரும் 25-ம் தேதி 5-வது கட்ட விசாரணை

கோவை : கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கோவையில் வரும் 25-ம் தேதி 5-வது கட்ட விசாரணையைத் தொடங்க இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

கோவை : கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கோவையில் வரும் 25-ம் தேதி 5-வது கட்ட விசாரணையைத் தொடங்க இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் இறுதிநாள் கலவரத்தில் முடிந்தது. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் கலவரம் தொடர்பாக, பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களிடம் கோவை, சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கோவையில் நீதியரசர் எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் 4 கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வரும் 25-ம்தேதி முதல் 27-ம் தேதி வரையில் 5-ம் கட்ட விசாரணையை நடத்த இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...