பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாகச் சர்ச்சையில் சிக்கிய பேராசிரியை நிர்மலா தேவியின் வாட்ஸ்ஆப் ஆடியோ விவகாரம் தொடர்பாக, விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானத்தை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். விசாரணை நடத்துவதற்காக மதுரை அரசு விருந்தினர் மாளிகை வந்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலை பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் துணைவேந்தர் செல்லதுரையிடம் விசாரணை நடத்தினார்.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி விருதுநகரில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பேராசிரியை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 7 குழுக்கள் அமைக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர். எஸ்.பி., ராஜேஷ்வரி மற்றும் டி.எஸ்.பி., முத்து சங்கரலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.