கோவை: மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு சிறந்த நீர்சறுக்கு மற்றும் பொழுபோக்கிற்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை: மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு சிறந்த நீர்சறுக்கு மற்றும் பொழுபோக்கிற்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், ஊட்டி சாலையில் உள்ள பிளாக்தாண்டர் பொழுதுபோக்கு பூங்கா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு நீர் சருக்கு உள்ளிட்ட நீர் சம்பந்தமான பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இடம் பெற்றிருப்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளுடன் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும், ஆண்டுதோறும் வனத்தின் அவசியத்தையும் குழந்தைகளிடம் அச்ச உணர்வைப் போக்கும் வகையில் வானில் பலூனில் பறக்கும் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தீம் பார்க்கில் சிறந்த முறையில் உரிய பாதுகாப்புடன் நடைபெற்று வருவதைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சிறந்த நீர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்கான தேசிய விருது மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது பிளாக்தாண்டர் தீம் பார்க்கின் செயல் இயக்குநர் வின்சென்ட் அடைக்கலராஜ் அவர்களிடம் வழங்கப்பட்டது. மேலும், மிகச்சிறந்த நீர் விளையாட்டு பூங்காவிற்கான மாநில அரசின் விருதும் அளிக்கப்பட்டுள்ளது.