மாநகரில் ஹெல்மெட் அணிந்து பயணித்த மகளிருக்கு ரோஜாப் பூ வழங்கிய குழந்தைகள்

கோவை: கோவை மாநகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்கி வந்த மகளிருக்கு பள்ளி சிறுமிகள் இனிப்பு மற்றும் ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கோவை: கோவை மாநகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்கி வந்த மகளிருக்கு பள்ளி சிறுமிகள் இனிப்பு மற்றும் ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் போக்குவரத்து காவலர்களுக்கான அலுவலக கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவல் ஆணையாளர், போக்குவரத்து துணை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொள்வர்.

அதன்படி, இந்த வாரம் நடந்த கூட்டத்தில் விழிப்புணர் நிகழ்ச்சிகளால் விபத்துக்கள் குறைந்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கும், கார்களில் சீட்பெல்ட் அணிந்து வருபவர்களுக்கும் இனிப்புகள், மற்றும் வாழ்த்துக்கள் கூறும் விதமாக ரோஜா பூக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, உதவி ஆணையாளர் (போக்குவரத்து) மகுடபதி, போக்குவரத்து ஆய்வாளர் (மேற்கு) சதாசிவம் மற்றும் உதவி ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியில் ஒப்பணக்கார வீதி மற்றும் வைசியாள் வீதி சிக்னலில் ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி சிறுமிகளை வைத்து இனிப்புகள் மற்றும் பூக்கள் வழங்கப்பட்டது.



இதில் நேற்று 80-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு "வெல்கம் ஹியரிங் ஹெல்மெட்" என்று புன்னகை பொங்க காவல்துறையுடன் இணைந்து சிறுமிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...