கோவை விமான நிலைய விரிவாக்கம்: தென்னைக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு

கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.


கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அங்குள்ள தென்னை மரங்களின் வயதுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான தென்னை மரங்களுக்கு ரூ. 27 ஆயிரமும், 10 முதல் 20 ஆண்டுகளான தென்னைக்கு ரூ.30 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு ரூ.29 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட வேண்டிய தென்னைகளுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...