பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியை நிர்மலா தேவி நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலைய போலீசார் நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர். 2-வது நாளாக தொடர்ந்த விசாரணை இன்று நிறைவு பெற்றது. இதனையடுத்து, அவர் விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிர்மலா தேவியை வரும் 28-ம் தேதி வரை 12 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...