மாணவியரை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் நிர்மலாதேவி. இவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளைப் பல்கலைக்கழகப் பெயரைக் கூறி பாலியலுக்கு வற்புறுத்திய ஒலிப்பதிவு ஒன்று அண்மையில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குறிப்பிட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திலும் மாணவிகள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, பேராசிரியரைக் கைது செய்யக் கோரி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பெண் பேராசிரியர் நிர்மலாதேவியை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, 2 நாட்களாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அவரிடம் இருந்து 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் நடந்து வந்த வந்த வழக்கு விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க காமராஜர் பல்கலை., குழு சார்பில் அமைக்கப்பட்ட குழுவை வாபஸ் பெறுவதாக துணைவேந்தர் செல்லமுத்து கூறியுள்ளார். மேலும், ஆளுநர் அறிவித்த குழுவுக்கு பல்கலை., முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.