மனித - விலங்குகள் மோதலை தடுக்கும் சிறப்பு குழுக்கள் நியமனம்

நீலகிரி: மனித விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.


நீலகிரி: மனித -  விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில், யானை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப் புறங்களிலும், நகர் பகுதிகளிலும் வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் காட்டெருமை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளை நிலங்களை சூறையாடி வருகின்றன. இதனால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, மனித உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் முயற்சியில் வனத்துறை சார்பில் 9 பேர் கொண்ட சிறப்பு குழுக்களை இன்று உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் வன விலங்குகள் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக 0423-2440968 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தொடர்பு கொண்டால், உடனடியாக அப்பகுதிக்கு சிறப்பு குழுக்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று வனவிலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 3 சிறப்பு குழுக்கள் ஈடுபடவுள்ளனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...