கோடை சீசனையொட்டி உதகையில் சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தொடக்கம்

நீலகிரி: கோடை சீசனையொட்டி உதகை வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா மையங்களைக் காண ஏதுவாக சீசன் கால சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கோடை சீசனையொட்டி உதகை வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா மையங்களைக் காண ஏதுவாக சீசன் கால சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, தேயிலை பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், படகு இல்லம் ஆகிய சுற்றுலா மையங்களைப் பார்வையிடும் வகையில் இயக்கப்படுகிறது.



இந்த பேருந்து பயணிக்க பெரியவர்களுக்கு ரூ. 100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு முறை மட்டும் பயணச்சீட்டு எடுத்து அன்றைய நாள் முழுவதும் அவரவர் நேரத்திற்கேற்ப சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டு, பயணித்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை பயணிகளின் நெரிசலுக்கேற்ப கூடுதலாக இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...