பிரபல நிறுவனத்தின் முத்திரை மோசடி : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உரிமையாளர் புகார்

கோவை : பிரபல தண்ணீர் குழாய் தயாரிக்கும் நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி குழாய் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை : பிரபல தண்ணீர் குழாய் தயாரிக்கும் நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி குழாய் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

அவான் பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பி.வி.சி. குழாய் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி பி.வி.சி. குழாய்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் தீத்திபாளையம் அருகே லாரியில் (TN 72 AA 4646) வெள்ளை நிற பி.வி.சி. குழாய்கள் ஏற்றப்படுவதைப் பார்த்த அவான் பிளாஸ்டிக் லிமிடெட்டின் மேலாளர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதில் அவர் கூறியதாவது :- எங்கள் நிறுவனத்தில் வெள்ளை நிற குழாய்கள் தயாரிப்பதில்லை. எங்கள் நிறுவனத்தை பயன்படுத்தி போலிக்கள் தயாரிக்கப்படுவது தங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கலங்கப்படுத்துகிறது. தற்போது, எங்கள் குறியீட்டை பயன்படுத்தி பி.வி.சி. குழாய்களை உற்பத்தி செய்து விற்று வரும் போலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக போலீசார் போலியை ஏற்றி வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அரசு திட்டப்பணிகளுக்காக இந்தப் பைப்புகள் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே, போலீசார் இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை செய்வது போல தெரியவில்லை, என்றார்

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...