அ.தி.மு.க., ஆட்சியில் கோவை மாவட்டம் பின்தங்கியுள்ளது : தி.மு.க., எம்.எல்.ஏ., நா. கார்த்திக்

கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார்.

கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார். 

பீளமேடு பகுதியில் உள்ள பூங்காவை தெற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் புதர்கள் மண்டியும், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் சேதம் அடைந்திருப்பதையும் பார்வையிட்டார். 

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின்போது, கோவை மாநகராட்சி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களும், பழைய பூங்காக்களையும் சேர்த்து பராமரிக்க ஒப்பந்த தொழிலாளர்கள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. இவைகளை அந்தந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். 

கடந்த 2 ஆண்டு காலமாக இந்தப் பூங்காக்கள் பராமரிக்கப்படாமல், புதர்கள் மண்டியும், விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. தி.மு.க., சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காக்கள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எடுபுடி அரசான எடப்பாடி அரசு தோல்வியை கண்டுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உள்ளாட்சித்துறை முற்றிலுமாக செயலிழந்து உள்ளது. 

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி. வேலுமணி எந்த நடவடிக்கையோ அக்கறை காட்டுவதில்லை. கோவை மாநகராட்சி முழுவதும் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டம் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது. கோவை மாநகராட்சி தத்தளித்து வருகிறது," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...