உயர் அதிகாரிகளுக்காக புரோக்கராக மாறிய பெண் பேராசிரியர்: மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியது ஆடியோவில் அம்பலம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக் கல்லூரியில் மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பெண் பேராசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக் கல்லூரியில் மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பெண் பேராசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாகப் பணியாற்றி வரும் நிர்மலாதேவி என்பவரே இந்த சிக்கலில் மாட்டியுள்ளார். இவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளைப் பல்கலைக்கழக பெயரைக் கூறி பாலியலுக்கு வற்புறுத்திய ஒலிப்பதிவு ஒன்று அண்மையில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குறிப்பிட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திலும் மாணவிகள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, பேராசிரியரைக் கைது செய்யக் கோரி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பெண் பேராசிரியர் நிர்மலாதேவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, அக்கல்லூரியின் செயலர் ராமசாமி அளித்த பேட்டியில், ‘‘பாலியல் வற்புறுத்தல் குறித்து கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர்.

இது குறித்து 3 மூத்த பேராசிரியர்களைக் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கூறினேன். அவர்களும் அறிக்கை அளித்தார்கள்.

அதன்பின் பேராசிரியை நிர்மலாதேவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டு குறித்து அவர் பதில் அளித்தபின் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும். அதன்பின் சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடரும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் நலன் கண்டிப்பாக பாதுகாக்கப்படும்’’ என்று கல்லூரியின் செயலர் தெரிவித்தார்.

மாணவ, மாணவிகளுக்கு குருவாக இருக்க வேண்டிய பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் புரோக்கராக மாறி போனில் பேசிய ஆடியோ பேச்சு வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி நிர்மலாதேவியின் பின்னணியில் இருக்கும் பல்கலைக்கழக அதிகாரிகள் யார்-யார்..? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னரே மாணவிகளை ஆசைக்கு இணங்க சம்மதிக்க வைக்குமாறு நிர்மலா தேவியிடம் அறிவுறுத்தியது யார்-யார்..? என்பது தெரியவரும். அப்போது அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...