கோடை மழையால் நிரம்பிய மேட்டுப்பாளையம் பகுதி குட்டைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்வதால் காய்ந்து போன குளம் குட்டைகளில் நீர் நிரம்பி வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கடும் வெப்பம் காரணமாக வறண்டுபோன குளம் மற்றும் குட்டைகளில் இதனால், மீண்டும் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கின்றது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை, பாக்கு, கரும்பு, தென்னை போன்ற விவசாயம் வறட்சியின் பிடியில் இருந்து தப்பியுள்ளது.

மேலும், தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து பாசன கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காரணமாக மேட்டுப்பாளையம் வனச் சரகதிர்க்கு உட்பட்ட காடுகளிலும் வறட்சி நீங்கி விலங்குகள் தாகம் தீர்க்கும் வனக் குட்டைகள், நீரோடைகள் மற்றும் தடுப்பணைகளில் நீர் நிரம்பி வருகின்றன.



இதனால் மான், காட்டெருமைகள் போன்ற உயிரினங்களுக்கான தண்ணீர் தேவை வனத்திற்குள்ளேயே பூர்த்தியாகியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...