கோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட்: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யது கொலை செய்யப்பட்டது தொடர்பாக வகுப்பறையில் பேசிய கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து கோவையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யது கொலை செய்யப்பட்டது தொடர்பாக வகுப்பறையில் பேசிய கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து கோவையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரியா. இவர், புரட்சிகர மாணவர் முன்னணி என்ற அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளார். நேற்று வகுப்பறையில் பொதுவான சம்பவங்கள் குறித்து பேசும்படி ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டுள்ளார். யாரும் பேச முன்வராத நிலையில், மாணவி பிரியா-வை ஏதாவது ஓரு தலைப்பில் பேசும்படி ஆசிரியர் கூறினார். இதில், மாணவி பிரியா காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது, அங்கு வந்த உதவி பேராசிரியர் மாணவியை திட்டியுள்ளார். மேலும், ஆசிரியரையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் பேச்சு குறித்து வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் சிலரும், உதவி பேராசியரும் முதல்வரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாணவி பிரியா-வை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், மாணவர்களுக்கு இடையே பாலினம் மற்றும் மதரீதியாக மோதல் ஏற்படும் வண்ணம் பேசியதாலும், அதை கேட்கச் சென்ற ஆசிரியையை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாகவும், மத அரசியல் மற்றும் பாலியல் ரீதியான மோதல் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் மாணவியை சஸ்பெண்ட் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது, மாணவி பிரியா மீதான இடை நீக்க உத்தரவைத் திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. மேலும், காஷ்மீர், உத்திர பிரதேச மாநிலங்களில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க-வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...