செல்வபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் 305 அடுக்குமாடி வீடுகள்: பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார் அமைச்சர்

கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், செல்வபுரம், கல்லாமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ரூ.26.99 கோடி மதிப்பில் 305 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

அதன்படி, செல்வபுரம் பகுதியில் ரூ.11.07 கோடி மதிப்பில் 120 குடியிருப்புகள், கல்லாமேடு பகுதியில் ரூ.7.95 கோடி மதிப்பில் 100 குடியிருப்புகள், மெக்ரிக்கர் சாலை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.7.97 கோடி மதிப்பில் 85 குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் பயனாளிகள் 305 பேருக்கு வீடுகளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...