கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் விபத்துக்கள்: சாலை விபத்தில் 5 வயது சிறுமி பலி

நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுற்றுலா சென்ற 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.



நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுற்றுலா சென்ற 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்துவிட்டு நேற்று கர்நாடகா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் கல்லட்டி மலைப்பாதை வழியாகச் சென்றது.

அப்போது, 23- வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பாறை மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அவனி (வயது 5) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த ஆதித்தி (1.½), நிஷலோ (8), சம்மந்தி (6), சந்தியா (33), விநாயக் (37), சபிதா (30), நவீன் (38) ஆகியோர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...