பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

கோவை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

கோவை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

கோவையில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் வாட்டிவதைத்து வந்தது. இதனால், மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர். கடந்த மாத தொடக்கத்தில் கோவை மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. ஆனால், நடப்பு மாதத்தில் மாநகர பகுதிகளில் மழை பெய்யவில்லை. மாறாக வெயில் சுட்டெரித்தது.

இந்த நிலையில், இன்று காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாநகர பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அங்கும் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...