கோவை: இன்று திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை கோவை ஜி.சி.டி. அருகே உள்ள தனியார் அரங்கத்தில் திருநங்கைகள் நடத்திய நாடகம் நடைபெற்றது.

இதில் ரேவதி என்ற திருநங்கை கலந்து கொண்டு, திருநங்கைகள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களை நாடகமாக நிகழ்த்திக் காட்டினார்.

கோயம்புத்தூர் ஒன் மற்றும் சகோதரி பவுண்டேசன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுவது கொண்டாட்டத்திற்காக அல்ல. அவர்களைப் பற்றி புரிந்துகொள்வதற்காகவே." என்றார்.

இதைத் தொடர்ந்து, குழந்தைகளை பாலியல் சீண்டல்களில் இருந்து காப்பதாக மெழுகுவர்த்தி ஏற்றி சபதம் ஏற்கப்பட்டது.